எதிர்பார்த்ததை விட 10 வருடங்களுக்கு முன்னராகவே கிழக்கு ஆசியா மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் ஆகியவையும் சேர்ந்துகொண்டிருக்கின்றன. இப்படியான புள்ளிவிபரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து முதல் தடவையாக இப்பிராந்திய நாடுகள் இயற்கையான மக்கள் தொகை வீழ்ச்சியால் பாதிக்கப்பட ஆரம்பித்திருக்கின்றன.

https://vetrinadai.com/news/south-korea-fertilty/

இந்த மக்கள் தொகை வீழ்ச்சி அந்த நாடுகள் எதிர்பார்த்ததை விடப் பத்து வருடங்களின் முன்னதாகவே ஆரம்பித்துவிட்டிருப்பதால் அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பீடுகளுடன் முரண்படும் என்றும் விளைவாக நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

10 % குழந்தைப் பிறப்புக் குறைந்த தென் கொரியாவில் 32, 700 ஆலும் தாய்வானில் 7,900 [7 % குறைவு] ஆலும் ஹொங்கொங்கில் 6,700 [18.5% ] ஆலும் இயற்கையான மக்கள் தொகை குறைவு ஏற்பட்டிருக்கிறது.  

1.4 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் பத்து மில்லியன் பேர் இறந்திருக்கிறார்கள். பிறந்திருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை 10.03 மில்லியன் ஆகும். அதாவது அவையிரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கின்றன. 

இந்த நாடுகளின் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்து வருகிறது. 2015 முதல் 2019 வரை சுமார் 10 % இலிருந்து அது 30 % ஆகக் குறைந்திருக்கிறது. 

இவைகளுடன் ஒப்பிடும்போது ஜப்பானில் பிள்ளை பிறப்புக்கள் 1980 இல் ஒரு பெண்ணுக்கு 2 என்று இருந்தது மெதுவாகக் குறைந்து தற்போது 1.3 என்ற அளவை எட்டியிருக்கிறது. சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு 2 என்ற எண்ணிக்கையில் பிள்ளைப் பெறுதல் இருத்தலே இயற்கையான மக்கள் வளர்ச்சி ஓரளவாவது இருக்கும்.  

சீனா, தென் கொரியா, ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலோ அது படு வேகமாகக் குறைந்திருக்கிறது. முக்கியமாகத் தென் கொரியாவில் 2020 இல் ஒரு பெண்ணுக்கு 0.84 பிள்ளை என்ற அளவிலேயே பிள்ளை பெறுதல் இருக்கிறது. சீனாவில் ஒரு பெண்ணுக்கு 1.3 என்ற அளவிலிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *