கிறீஸ்துவின் படப் பதிப்புரிமைக் குற்றத்துக்காக வத்திக்கானை நீதிமன்றத்துக்கிழுக்கிறார் ஒரு வீதி ஓவியர்.
தன்னிடம் சேகரிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான படைப்புக்கள், ஓவியங்கள், சிற்பங்களுக்கெல்லாம் அவையவைக்கான படைப்புரிமைக்காக மில்லியன்களை வருமானமாகப் பெறும் அமைப்பு வத்திக்கான். ஆனால், வீதியில் படைக்கப்பட்டிருந்த ஒரு சாதாரண ஓவியரின் அனுமதியின்றித் திருடி முத்திரைகளாக்கியதற்காக நீதிமன்றத்தின் முன் இழுக்கப்பட்டிருக்கிறது.
அலெஸ்ஸியா பார்புரூ என்ற பெண் வீதிகளில் புதிய பரிமாணங்களில் படங்களை வரைபவர். 2019 இல் அவர் கிறிஸ்துவின் படமொன்றைத் தனது படைப்பாக வத்திக்கான் நகரப் பாலமொன்றின் சுவரில் பதித்திருந்தார். அதே படமானது 2020 இல் வத்திக்கானால் வெளியிடப்பட்ட முத்திரையிலிருக்கும் படத்தில் சேர்க்கப்பட்டிருந்ததை அவர் பின்னர் அறிய நேர்ந்தது.
பார்புரூ பல வழிகளிலும் வத்திக்கான் அதிகாரத்தைத் தொடர்பு கொண்டு தனது அனுமதியின்றித் தனது படைப்பை அவர்கள் பாவித்ததைச் சுட்டிக்காட்ட முயன்றும் அவர்கள் அதைப் புறக்கணித்தார்கள். எனவே அவர் 130,000 எவ்ரோ நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்