கருக்கலைப்பு ஆதரவு அரசியல்வாதிகளுடன் மோதும் அமெரிக்கத் திருச்சபை பற்றி விவாதிக்க பிளிங்கன் ரோமில்.
வத்திக்கானுக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் அந்தனி பிளிங்கன் தனியாகப் பாப்பரசரைச் சந்தித்து 40 நிமிடங்கள் சம்பாஷித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க அரசியலில் கருக்கலைப்பை எதிர்க்கும் கத்தோலிக்க உயர்மட்டத்தினரைக் கையாளவே அவர் பாப்பரசரைச் சந்தித்ததாகத் தெரிகிறது.
2015 இல் தனது அமெரிக்க விஜயத்தில் அன்றைய ஜனாதிபதி ஒபாமாவைச் சந்தித்தது பற்றியும் அச்சமயம் பாப்பரசர் அமெரிக்கர்களுடன் நெருங்கியதைப் பற்றியும் பாப்பரசர் பிளிங்கனுடன் நன்றியுடன் பேசியதாக அவரது உதவியாளர் மத்தேயு புருனெய்.
கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குக் குறுகிய காலம் முன்னதாக வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்த மைக் பொம்பியோவைச் சந்திக்க பாப்பரசர் மறுத்திருந்தார். அதற்குக் காரணம் தேர்தலுக்கு நெருக்கமாக அவர் எவ்வித அரசியல் ஆதரவையும் காட்ட விரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டது.
நீண்ட நேரம் பிளிங்கனுடன் பாப்பரசர் சந்தித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது தாம் உள்நாட்டு அரசியல் பற்றிப் பேசவில்லை என்று பிளிங்கன் பதிலளித்தார். தமது நெருங்கிய உறவைத் தொடர்ந்தும் நிலை நாட்டுவது பற்றியே தமது பேச்சுவார்த்தை இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்