கேரளக் காடொன்றில் தமக்குள் மோதிக்கொண்டு ஒரு புலியும், யானையும் இறந்தன.
இடமாலயார் காடுகளில் கழுதப்பெட்டிப் பகுதிக் காடுகளில் ஒரு யானையும், புலியும் இறந்திருப்பதைக் வன அதிகாரிகள் கண்டார்கள். அவை இறந்து கிடந்த இடத்திலிருந்த அடையாளங்களைக் கவனித்தபோது அவ்விரண்டு மிருகங்களுக்குமிடையே நீண்ட நேரச் சண்டை நடந்திருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிவதாகக் வன அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
கேரளக் காடுகளில் இவ்விரு மிருகங்களுக்குமிடையே நேரடிச் சண்டை ஏற்படுவது அரிதான சம்பவமாகும். 2009 – 10 ஆண்டில் அவ்விரண்டு மிருகங்களும் சண்டையிலீடுபட்டது அப்பகுதியின் பாதுகாப்புக் கமராக்களில் சிக்கியிருந்தது. பொதுவாக வளர்ந்த யானைகளைப் புலிகள் தாக்குவதில்லை. ஆனால், யானைக்குட்டிகளுடன் செல்லும் யானைக் கும்பலைப் புலிகள் தொடர்வதுண்டு.
நடந்திருக்கும் சம்பவத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல யானைகள் பங்குபற்றியிருக்கலாமென்று குறிப்பிடுகிறார்கள் அதிகாரிகள். இறந்த இரு மிருகங்களும் மோதிக்கொண்டபோது மற்ற யானைகளும் சேர்ந்து புலியைத் தாக்கியிருக்கலாமென்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்