அட்டவணையிடப்பட்ட சர்வதேசப் பயணிகள் விமானங்களுக்கு இந்தியாவில் செப் 30 வரை தடை நீடிக்கப்பட்டது.
இந்திய வான்வெளிப்பயண இயக்குனர் இந்தியாவின் சர்வதேச விமானப் பயணங்கள் மீதான தடை செப்டெம்பர் 30 திகதி வரை நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறார். கொவிட் 19 தொற்றுக்கள் காரணமாக நீண்ட காலமாக அமுலில் இருக்கும் இந்தியாவின் சாதாரண விமானப் பயணிகளுக்கான சர்வதேசப் பயணத் தடையே தொடர்ந்தும் அமுலிலிருக்கும் என்று அச்சுற்றறிக்கை தெரிவிக்கிறது.
அதேசமயம் சர்வதேச விமானப் பயணங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் பிரத்தியேக ஆராய்வு, ஒப்பந்தங்கள் மூலம் அனுமதிக்கப்படும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சரக்கு விமானங்கள் வழக்கம்போலத் தொடர்ந்தும் செயற்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்