தென் யேமனிலிருக்கும் சவூதிய இராணுவத் தளத்தைத் தாக்கி 30 வீரர்களை ஹூத்தி இயக்கத்தினர் கொன்றார்கள்.
யேமனின் தென்பகுதியிலிருக்கும் அல்- அனாட் இராணுவத் தளத்தை ஞாயிறன்று தாக்கியிருக்கிறார்கள் ஹூத்தி இயக்கத்தினர். குறிப்பிட்ட இராணுவத் தளத்தில் யேமனில் ஐ.நா-வின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சியை நிறுவியிருக்கும் சவூதி ஆதரவு அரசின் படையினர் தங்கியிருக்கிறார்கள்.
ஹூத்தி இயக்கத்தினர் காற்றாடி விமானத்தின் மூலமும், ஏவுகணை மூலமும் அந்த இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடாத்தியதாக தெற்கு யேமன் இராணுவப் பொறுப்பாளரான முஹம்மது அல்-நக்கீப் குறிப்பிட்டிருக்கிறார். 30 – 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சாதாரண மக்களும் கொல்லப்பட்டார்களா, காயப்பட்டிருக்கிறார்களா என்பது பற்றித் தெரியவில்லை.
சவூதியால் ஆதரிக்கப்படும் யேமனிய அரசாங்கத்துக்கும் ஹூத்தி இயக்கத்தினருக்கும் இடையே நடந்துவந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறியடைந்துவிட்டன. அதன் பின்னர் ஹூத்தி இயக்கத்தினர் பல தாக்குதல்களை சவூதி அரேபியாவினால் யேமனுக்கு அனுப்பப்பட்டிருக்கும் இராணுவத்தினர் மீது பல தாக்குதல்கள் நடத்தியிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்