ஒவ்வாமைகள் உள்ளவர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுத்தலை உடனடியாக நிறுத்துகிறது ஐக்கிய ராச்சியம்.
ஆரம்ப நாட்களில் கொவிட் 19 தடுப்பு மருந்து (Pfizer och Biontech) பெற்ற மருத்துவ சேவையிலிருப்பவர்கள் இருவர் மெதுவான பக்க விளைவுகளைச் சந்தித்ததனால் உணவு, மருந்துகள் மற்றும் காரணங்களினால் ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பு மருந்து எடுப்பதைத் தவிர்க்கும்படி அறிவூட்டப்படுகிறது.
உலகின் முதலாவது நாடாக ஒரு கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பாவனைக்குக் கொண்டுவந்த பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சித் திணைக்களம் மீது ஏற்கனவே கேள்விக்குறிகளும் சந்தேகங்களும் எழுந்திருந்தன. இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையால் அக்கேள்விகள் மீண்டும் எழவே “ஒரு மருந்தைப் பாவனைக்குக் கொண்டுவருவதற்கான சகல படிகளையும் நாம் பின்பற்றியிருக்கிறோம்,” MHRA உறுதியாகக் கூறியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்