6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021
நேற்று மாலை (26 .12 .2020) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே கொள்ளக்கூடிதாக அரங்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.
கொவிட் 19 க்கு எதிரான சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தன. விழாவுக்கான ஒழுங்குகளை கிருதர்சன் நிக்கொலஸ் மேற்கொண்டு நிகழ்வை ஆரம்பித் வைத்தார். அகிலன் பாக்கியநாதன் உட்பட சபையிலிருந்த திரைப்பட ஆர்வலர்களள் மங்கள விளக்கேற்றியதைத் தொடந்து திரைப்பட காட்சி ஆரம்பமாகியது.
முதலாவது Mug (2018) என்ற போலந்து திரைப்படம் காண்பிக்கப்பட்டது . இப்படம் 68 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிக் கரடி விருதுக்காக ஜுரிகளால் தேர்வு செய்யப்பாட்டு வழங்கபட்டது . மிக நல்ல திரைப்படம் .
நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் போலிஸ் ராணுவ அனுமதி பெற்று யாழ் மக்களுக்கு இத் திரைப்பட விழாவை வழங்கும் அனோமா ராஜகருணா கிருதர்சன் நிக்கொலஸ் உட்பட எனையோரும் பாராட்டுக்குரியவர்கள்.
இராசரட்ணம் கிருஷ்ணகுமார்