“இந்தியாவின், நவீன அம்மாக்கள் வாழ்க்கையை முடிந்தவரை ரசித்து வாழ்வதையே விரும்புகிறர்கள்,” என்கிறது ஒரு ஆராய்வு.

30 – 60 வயதுக்கிடையேயான உயர்கல்விகற்ற [78%], உயர்ந்த பதவிகளிலிருக்கும் [74 %] பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களிடையே வினாக்கள் மூலம் நடாத்தப்பட்ட ஆராய்விலிருந்து கல்யாணமான, பிள்ளைபெற்ற பெண்களில் 48 % பேர் கல்யாணத்துக்கு வெளியே இரகசிய உறவுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

கல்யாணமான ஆண்களே தமது மனைவியரைவிட வெளியேயுள்ள பெண்களுடன் இரகசியமாகத் தொடர்பு வைத்துக்கொள்வதுண்டு என்ற பொதுவான எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் இந்த உண்மையை கிளீடன் நிறுவனத்தின் ஆராய்வு குறிப்பிடுகிறது. [பிரான்ஸைச் சேர்ந்த கிளீடன் இணையத்தளம் கல்யாணமான பெண்கள் ஆண் நண்பர்களைத் தொடர்புகொள்ளும் வசதிகளை உண்டாக்கிக் கொடுப்பதற்காக இயங்கிவருகிறது.]

உயர்கல்வியும், வேலைபார்க்குமிடங்களில் உயர்ந்த ஸ்தானத்தையும் வகிக்கும் இந்தப் பெண்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். பிள்ளை பெற்றுக்கொண்டாலும் தாம் பார்ப்பதற்குக் கவர்ச்சியாகவே இருப்பதாக நம்பும் இப்பெண்களில் 76 % தமது கணவர்கள் தங்களுக்கு இணையாகக் கவர்ச்சியாக இல்லை என்கிறார்கள். 64 % பெண்கள் தமது கணவரிடம் பாலியல் ஆசை பூர்த்தி செய்யப்படுவதில்லை என்கிறார்கள். அவர்களில் 60 % பேர் தமது தாம்பத்திய வாழ்வில் உடலுறவே அற்றுப்போயிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

நவீன இந்தியப் பெண்கள் தங்களைத் தங்கள் கணவர்மார் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கும் அழகிய, விலையுயர்ந்த பொருளாகக் கருதுவதை ஏற்றுக்கொள்வதில்லை. தமது ஆசைக்கேற்ற விடயங்களைச் செய்வதில் கணவனைப் போலவே ஆர்வத்துடன் இயங்க விரும்புகிறார்கள். இப்பெண்கள் தங்கள் உணர்வுகள், இச்சைகள் மதிக்கப்படாமல் தங்களை வீட்டில் வேலை செய்பவர்களாகவும், பிள்ளை பார்ப்பவர்களாகவும் கருதத் தயாராக இல்லை.  

பழங்காலப் பெண்கள் போல தற்காலிக உறவுகள் வைத்துக்கொள்வதால் இப்பெண்கள் குற்ற உணர்வு கொள்ளத் தயாராக இல்லை. அத்துடன் இணையத் தளத் தொடர்புகள், தொலைபேசித் தொடர்புகளைத் தாண்டி இரகசியமாகத் தற்காலிக உறவுகளை, தாம்பத்தியத்துக்கு வெளியே உறவுகளை வைத்திருக்கும் வசதிகள் இயல்பாக இருக்கும் இக்காலத்தில் பெண்கள் அவற்றைப் பயன்படுத்துவதில் ஈடுபடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *