பாரிஸ் அவசர நோயாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம்! ஆஸ்பத்திரி அழுத்தம் அதிகரிப்பு
பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப்பிரிவுகளில் உள்ள கொரோனா நோயாளிகள் அங்கிருந்து நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருவதை அடுத்தே நோயாளிகளை இடமாற்றும் பணிகள் வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்திருக்கிறார்.
நெருக்கடியான அளவுக்கு மருத்துவ மனை அனுமதிகள் அதிகரித்துள்ள போதிலும் இல்-து-பிரான்ஸ்(Île-de-France) பிராந்தியத்தில் புதிதாகக் கட்டுப்பாடுகள் எதனையும் அமுல் செய்யத் தீர்மானிக்கப் படவில்லை என்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் நோயாளர் குறைவாகக் காணப்படுகின்ற
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு இங்கிருந்து நோயாளர் களை இடம்மாற்றுவதன் மூலம் நெருக் கடியைச் சமாளிக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது.
12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாரிஸ் பிராந்தியத்தில் சுமார் ஆயிரம் அவசர சிகிச்சைப் படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில் எண்பது வீதமா னவை ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி விட்டன என்று தெரிவிக்கப் படுகிறது.
இதேவேளை, நாட்டின் மேற் பிராந்திய (Hauts-de-France) மருத்துவமனைகளைச் சேர்ந்த அவசர நோயாளிகளை எல்லை நாடான பெல்ஜியத்தில் உள்ள ஆஸ்பத் திரிகளுக்கு இடம்மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.