லுஜைன் அல் – ஹத்தூலின் சிறைத்தண்டனையை சவூதிய நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்து தீர்ப்பளித்தது.
பெண்களுக்கும் ஆண்களுக்குச் சமமான உரிமைகள் சவூதி அரேபியாவில் கொடுக்கப்படவேண்டுமென்பதற்காகப் போராடிய லுஜைன் அல் – ஹத்தூல் நீண்ட காலம் தடுப்புச் சிறையிலிருந்தபின் கடந்த வருட இறுதியில் ஆறு வருடச் சிறைத்தண்டனை பெற்றார். அவரை தீவிரவாதச் சட்டங்கள், இணையத்தளத்தின் எல்லைகளை மீறியது போன்றவைகளுக்காக சவூதி அரேபியா தண்டித்திருந்தது.
கடந்த மாதம் திடீரென்று எவரும் எதிர்பாராதவிடமான அல் – ஹத்தூல் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவரது விடுதலை கட்டுப்பாட்டுக்குரியது என்றும் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்றும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
வழக்குக்குப் போகும் வழியில் மிச்சமிருக்கும் தனது சிறைத்தண்டனை ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கையிலிருந்த அல்-ஹலூலின் எண்ணத்தில் மண் விழுந்தது. நீதிமன்றம் அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டிருந்த தண்டனையை ஊர்ஜிதம் செய்து தீர்ப்பளித்தது சர்வதேச ரீதியில் அவருக்கு ஆதரவளித்து வந்த மனித உரிமை அமைப்புக்கள் எல்லாவற்றுக்குமே ஏமாற்றத்தைத் தந்தது.
எனிதும் லூஜைன் தொடர்ந்தும் சிறைக்குள் இருக்கவேண்டியதில்லை. ஆனால், அவர் சவூதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்.
மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும், சவூதியில் வாழும் மேலுமிரண்டு அமெரிக்கக் குடிமக்களும் பெப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களும் மீண்டும் வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜாராகவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்