இத்தாலியின் பெரும் பகுதிமீண்டும் முடக்கப்படுகிறது!பள்ளிகள், உணவகங்கள் பூட்டு
புதிய தொற்று அலை காரணமாக இத்தாலி நாட்டின் பெரும் பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் முடக்கப்படுகின்றன.
ஓராண்டு காலத்துக்குப்பிறகு நாடு மீண்டும் ஒரு பெரும் தொற்று அலையைச் சந்திப்பதாக பிரதமர் மரியோ ட்ராகி (Mario Draghi) தெரிவித்திருக்கிறார். அதனை எதிர்கொள்வதற்கான புதிய கட்டுப்பாடு களை அவர் இன்று வெளியிட்டிருக் கிறார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி-மார்ச்சில் வைரஸ் முதல் அலையாகத் தொற்றத் தொடங்கிய போது முதலில் முடக்கப்பட்ட ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். ஐரோப்பாவில் அதி கூடிய எண்ணிக் கையாக இதுவரை ஒரு லட்சம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் இன்று அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி வாராந்தம் 250 தொற்றுக்கள் ஏற்படும் பகுதிகள் சிவப்பு வலயங்கள் என்ற பிரிவினுள் அடக்கப்பட்டு அங்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
மார்ச் 15 முதல் ஏப்ரல் 6வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். சிவப்பு வலயங்களில் பாடசாலை கள்,பல்கலைக்கழகங்கள் உணவகங்கள், அருந்தகங்கள் போன்றன மூடப்படவேண் டும்.
இதற்கு மேலதிகமாக ஈஸ்டர் விடு முறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 3,4,5 ஆகிய தினங்கள் நாடு முழுவதும் சிவப்பு வலயமாக்கப்பட்டு முடக்கப்படவுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.