சிறீலங்கா மதராஸாக்கள் பலவற்றை மூடி புர்க்காவையும் தடை செய்தது.
சிறீலங்காவின் மக்கள் பாதுகாப்பு சரத் வீரசேகரா நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி முழு அளவில் முகத்தை மறைக்கும் புர்க்கா அணிவதையும், சட்ட ஒழுங்குகளுக்கு இணையப் பதியப்படாத, அரச கல்விக் கோட்பாட்டுக்கு அடங்காத மதராஸா பள்ளிக்கூடங்களையும் மூடிவிடும் முடிவில் கையெழுத்திட்டிருப்பதாகப் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.
“உடலையும், முகத்தையும் சேர்த்து முழுசாக மறைக்கும் உடையை முஸ்லீம் பெண்கள் ஆரம்ப காலத்தில் அணிந்திருந்ததில்லை,” என்று தெரிவித்த அமைச்சர் அவைகளைத் தடுக்கக் காரணம் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் வளர்ச்சியே என்றார். அவை 2019 உயிர்த்த ஞாயிறுக் குண்டு வைப்புக்குப் பின்னர் தடைசெய்யப்பட்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“எவரும் தம்மிஷ்டப்படி பாடசாலைகளைத் திறந்து தமக்குத் தோன்றுபவற்றைப் பிள்ளைகளுக்குக் கற்பிக்க முடியாது,” என்று அவர் மதராஸாக்கள் பலவற்றை மூடுவதுபற்றித் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்