பாலஸ்தீனருக்கும் இஸ்ராயேலுக்குமிடையே அமைதி உண்டாக்கி வைக்க நாம் தயாரென்கிறது சீனா.
சர்வதேச அரங்கின் முக்கிய பிரச்சினைகளிலொன்றான பாலஸ்தீனா – இஸ்ராயேல் விடயத்தில் அமைதியைக் கொண்டுவர அவ்விரண்டு தரப்பினரையும் சீனாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன்வருகிறது சீனா. மத்திய கிழக்கில் சுற்றுலாவில் ஈடுபட்டுவரும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சங் யி இதை நேர்காணலொன்றில் தெரிவித்திருக்கிறார்.
சவூதி அரேபியாவும், ஈரானும் யேமன் நாட்டில் செய்துவரும் போரின் நிலைமை மோசமாகி வருகிறது. அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஓரிரு நாட்களுக்கு முன்னர் சவூதி அரேபியா ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து, வான் வெளி முழுவதையும் திறந்துவிடும்படி ஈரான் ஆதரவு பெறும் ஹூத்தி போராளிகளை சவூதி அரேபியா கேட்டிருக்கிறது. ஆனால், ஹூத்திகள் அத்திட்டத்துக்கு இன்னும் தமது நம்பிக்கையைத் தெரிவிக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்