“டோட்டால்” எரிநெய் நிறுவனம் மீண்டும் மொசாம்பிக்கிலிருந்து வெளியேறுகிறது, பால்மா நகர் வீழ்ந்ததால்.
மொசம்பிக்கின் பால்மா நகரை முழுவதுமாக அல் ஷபாப் என்று குறிப்பிடப்படும் ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியிருக்கிறது. அந்த நகரின் அருகிலிருக்கும் பிரான்ஸின் இயற்கை எரிவாயு நிறுவனம் அவ்விடத்தைக் கைவிட்டுவிட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.
அங்கிருந்த ஹோட்டலொன்றில் தஞ்சம் புகுந்திருந்த அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் தீவிரவாதக் குழுவினர் அந்த நகரைத் தாக்கியபோது கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. நகரின் வீதியோரங்களில் பிணங்கள் கிடப்பதாக தென்னாபிரிக்காவிலிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல வாரங்களாகவே பால்மா நகரைச் சுற்றி அல் ஷபாப் தீவிரவாதிகள் முற்றுகையிட்டிருந்தார்கள் என்று கடந்த வாரம் அப்பகுதிக்குள் நுழைந்த பிபிசி ஊடகவியலாளர்கள் மூலம் தெரியவருகிறது. இக்குழு ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்புடையது. இஸ்லாமிய காலிபாத் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக மிலேச்சத்தனமான கொலைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.
பின்வாங்கிய மொசாம்பிக் படைகளா பால்மா நகரத்தின் கட்டுப்பாட்டை மொசாம்பிக் அரசு இழந்துவிட்டது. இப்பிராந்தியத்தில் வாழ்பவர்கள் மூலம் கடந்த சில நாட்களாகத் தம்மை எதிர்ப்பவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அல் ஷபாப் சிரச்சேதம் செய்தும் வருவதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்