சினோபார்ம் நிறுவனத்தின் இரண்டு தடுப்பு மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி விபரங்கள் முதல் தடவையாக வெளியிடப்பட்டிருக்கின்றன.
சீன அரசின் இரண்டு மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் சினோபார்ம் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளிலும் ஏற்கனவே பாவனையிலிருக்கும் இவை பற்றிய ஆராய்ச்சி விபரங்களைச் சீனா வெளியிடவில்லையென்று பரவலாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அவைகளுக்குப் பதிலளிப்பது போல அவையிரண்டும் மனிதர்களில் பாவிக்கப்பட்டதில் கொரோனாத் தொற்றுக்களிலிருந்து எத்தனை விகிதப் பாதுகாப்பை அவை கொடுக்கின்றன என்பது அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிச் சஞ்சிகையொன்றில் ( Journal of the American Medical Association) வெளியாகியிருக்கிறது.
இந்தத் தடுப்பு மருந்துகளின் பரிசோதனைகளின்போது பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு உண்மையான தடுப்பு மருந்தும் இன்னொரு பகுதியினருக்குப் பொய்யானதும் கொடுக்கப்பட்டது. அவை கொடுக்கப்பட்ட பின்னர் அவர்களில் எத்தனை பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடாத்தப்பட்டது.
இஸ்ராயேல், ஐக்கிய ராச்சியம், மங்கோலியா, சிலி, இந்தியா, பஹ்ரேன், ஹங்கேரி, அமெரிக்கா,பிரேசில், எமிரேட்ஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் மனிதர்களிடையே இந்த பரீட்சைகள் நடாத்தப்பட்டன. அவைகளின் பதிலாக ஒரு தடுப்பு மருந்து 72.8 % மற்றது 78.1 % பாதுகாப்பையும் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவருக்குத் தருவதாகத் தெரிகிறது.
இவையிரண்டையும் தவிர வேறும் சில தடுப்பு மருந்துகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகளில் தற்போது பரீட்சாத்த நிலையிலிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்