மூன்றாவது அரையிறுதி மோதல் அணியாகத் தயாரானது கொலம்பியா, உருகுவேயை வென்றதன் மூலம்.
கொப்பா அமெரிக்காவின் அரையிறுதி மோதலுக்கு முன்னேறுவதற்காக உருகுவேயுடன் மோதிய கொலம்பியா விளையாட்டு ஆரம்பித்ததிலிருந்தே பலமான அணியாகத் தெரிந்தது. கட்டுக்கோப்புடனும், வேகத்துடனும் விளையாடினாலும் இரண்டு அணிகளும் விளையாட்டு 90 நிமிடங்களில் முடிந்தபோது வலைக்குள் பந்துகள் எதையும் போடவில்லை.
எனவே இரண்டு அணிகளும் தமது வலைகாப்பாளர்களை பரீட்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இத்தாலியின் நாப்போலி குழுவுக்காக விளையாடும் கொலம்பியாவின் வலைகாப்பாளர் டேவிட் ஒஸ்பினா தன் திறமையைக் காட்டக் கிடைத்த சந்தர்ப்பத்தை அருமையாகக் கையாண்டார். ஜிமேன்ஸ் யி வின்யா அடித்த பந்து உள்ளே போகவிடாமல் தடுத்ததன் மூலம் அவர் கொலம்பியாவை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதியுள்ளவர்களாக்கியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்