வலைக்கு 20 மீற்றர் தொலைவிலிருந்து பந்தை உதைத்து கொலம்பியாவுக்கு மூன்றமிடத்தைப் பெற்றுக்குக் கொடுத்தார் லூயிஸ் டியாஸ்.
கொப்பா அமெரிக்கா முதலிடத்துக்கான மோதல் சனிக்கிழமை இரவு நடக்கவிருக்கிறது. நடந்து முடிந்திருக்கிறது மூன்றாமிடம் யாருக்கென்ற மோதல். பங்குபற்றியிருந்த கொலம்பியா – பெரு ஆகிய நாடுகளின் அணிகள் அந்த மோதலில் பங்குபற்றி 90 நிமிடங்கள் அழகாக விளையாடின.
மோதலின் கதா நாயகனாகத் திகழ்ந்தார் லூயிஸ் டியாஸ். போர்த்துக்காலின் பிரபல அணிகளிலொன்றான போர்ட்டோவுக்காக விளையாடிவரும் லூயிஸ் டியாஸ் 21 வயதானவர். மோதலில் இரண்டாவது கோலைப் பெருவுக்கு எதிராககப் போட்டிருந்த லூயிஸ் டியாஸ் 2 – 2 என்ற எண்ணிக்கையில் 90 நிமிடங்களைத் தாண்டியிருந்த மோதலில் மேலதிகமாகக் கொடுக்கப்பட்டிருந்த 3 நிமிடங்கள் இருந்தபோது பந்தை 20 மீற்றர் தூரத்திலிருந்து பலமாக உதைத்தார். பெருவின் வலைக்காப்பாளரான பெட்ரோ கலீஸெயால் பிடிக்க முடியாமல் போன அந்த கோல் கொலம்பியாவுக்கு மூன்றாமிடத்தைக் கொடுத்தது.
சாள்ஸ் ஜெ. போமன்