ஒபெக், ஒபெக் கூட்டுறவு நாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய்த் தயாரிப்பை அதிகரிக்க முடிவெடுத்திருக்கின்றன.
எமிரேட்ஸ் எண்ணெய் வள அமைச்சர் சுஹெய்ல் பின் முஹம்மது அல்-மஸ்ரூயி “ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவிக்க சவூதியின் அதே அமைச்சர் ஒப்பந்தத்தின் பின்னணி என்னவென்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்க ஞாயிறன்று உலகச் சந்தைக்கு மேலதிக பெற்றோலைக் கொண்டுவரப்போவதாக எண்ணெய்த் தயாரிப்பு நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏறுமுகமாக இருக்கும் எண்ணெய் விலை அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் ஓரளவு குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் உலகச் சந்தைக்கான நாளாந்த எண்ணெய்த் தயாரிப்பு சுமார் 10 மில்லியன் பீப்பாய்களால் குறைக்கப்பட்டது. அதன் பின்பு அது சிறிதளவு அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அதன் பாதியளவு உயர்த்தப்படவில்லை. அதை இவ்வருட முடிவு வரை தினசரி 2 மில்லியன் பீப்பாய்களால் உயர்த்துவதே ஞாயிறன்று எடுக்கப்பட்ட முடிவின் சாராம்சமாகும்.
ஆகஸ்ட் முதல் உலகச் சந்தைக்கு அதிக எண்ணெய் கிடைத்தாலும் முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த “தயாரிப்புக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்” ஏப்ர 2022 இலிருந்து டிசம்பர் 2022 வரை நீட்டப்பட்டிருக்கிறது. அதன் மூலம் தொடர்ந்தும் தேவையானால் எண்ணெய் விலையில் கணிசமான மாறுதல்களைக் கொண்டுவரும் அதிகாரத்தை எண்ணெய்த் தயாரிப்பு நாடுகள் தம்மிடம் வைத்திருக்கின்றன.
சவூதி அரேபியா, எமிரேட்ஸ், குவெய்த், ரஷ்யா ஆகிய நாடுகள் புதிய ஒப்பந்தத்தின்படி தமது தயாரிப்பை முன்னரை விட அதிகப்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.
சாள்ஸ் ஜெ. போமன்