நியூயோர்க் நகர ஆளுனர் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக விசாரணையொன்று வெளிப்படுத்தியது.

அமெரிக்காவின் டெமொகிரடிக் கட்சியினருக்குப் புதியதாக ஏற்பட்டிருக்கும் சாட்டையடியாகியிருக்கிறது நியூயோர்க் நகர ஆளுனர் ஆண்ட்ரூ கூமோ பல பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கும் விடயம். பல பெண்களால் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இவ்விடயத்தை விசாரித்து அரச வழக்கறிஞர் தரப்பிலிருந்து ஒரு 168 பக்க அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அவர்களின் விருப்பமின் ஆண்ட்ரூ கூமோ பல பெண்களை முத்தமிட்டதாகவும், தடவியதாகவும் குறிப்பிடப்படுவதுடன் அவர் அவர்களை நோக்கித் தவறான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்ததாகவும் அவ்வறிக்கையிலிருந்து தெரியவந்திருக்கிறது. 179 பெண்கள் அரச வழக்கறிஞரால் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களில் ஒரு சாரார் அரச ஊழியர்கள். ஆளுனரோ இதுவரை பதவியை விட்டு விலக மறுத்துத் தான் நிரபராதி என்று குறிப்பிட்டு வருகிறார்.

அவருக்கு எதிர்த்தோ, மறுத்தோ எதையும் சொல்லமுடியாத நிலையில் நியூயோர்க் அரசாங்க ஊழியர்கள் இருப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. அதனால், வேலைசெய்யும் இடத்தில் ஒரு இறுக்கமான, மகிழ்ச்சியற்ற சூழல் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்விசாரணை ஒரு சமூகக் குற்றமாக இருப்பதால் அரச வழக்கறிஞர் மீது தற்போதைய நிலையில் எவ்வித வழக்கையும் ஆரம்பிக்க முடியாது.

ஆளுனரின் கட்சிக்குள்ளிருந்தும் பலர் அவரைப் பதவி விலகுமாகு கோரி வருகின்றனர். பாராளுமன்றச் சபாநாயகரான நான்ஸி பெலோசியும், ஜோ பைடனும் கூட ஆண்ட்ரூ கூமோ பதவி விலகவேண்டுமென்று பகிரங்கமாகக் கோரியிருக்கிறார்கள். நகரில் பல தடவைகள் அவரைப் பதவி விலகும்படி கோரி ஊர்வலங்கள் நடாத்தி வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *