தேர்தல் நடக்காமல் இஸ்மாயில் சாப்ரி யாக்கூப் மலேசியாவின் அடுத்த பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
“Sheraton Move” என்ற பெயரில் மூடிய ஹோட்டல் கதவுகளுக்குப் பின்னால் பேரம் பேசி மலேசியாவின் பிரதமரான முஹ்யிதீன் யாசின் திங்களன்று மலேசியாவின் அதிகுறைந்த காலப் பிரதமர் என்ற அவப்பெயருடன் பதவியிழந்தார். தேவையான பாராளுமன்ற ஆதரவில்லையென்பதைக் கடைசியில் ஒத்துக்கொண்டு அவர் ராஜினாமா செய்தார்.
2018 தேர்தலில் வென்று தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறிய மஹாதிர் முஹம்மதுவின் வீழ்ச்சியால் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டாலும் கொவிட் 19 அதிவேகமாகப் பரவிவரும் மலேசியாவில் தேர்தல் நடத்தாமலே பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பேரம் பேசிப் பிரதமராகுவது நடந்து வருகிறது. அந்த வகையிலேயே 2018 தேர்தலில் தோல்வியடைந்த கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த இஸ்மாயில் சாப்ரி யாக்கூப் 114 பா.உ-க்களைத் தனக்கு ஆதரவாகச் சேர்த்துப் பிரதமராகியிருக்கிறார்.
Umno கட்சியின் உப தலைவரான இஸ்மாயில் சாப்ரி யாக்கூப் சனிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் மலேசியாவின் 9 வது பிரதமராகும்.
சாள்ஸ் ஜெ. போமன்