கேரளாவில் மற்றைய மதங்களிலிருந்து இந்துவாக மாறுகிறவர்களே அதிகம்.
கேரள மாநிலத்தின் புள்ளிவிபரங்களின்படி கிறீஸ்தவம், இஸ்லாம் உட்பட்ட மதங்களிலிருந்து மாறி இந்துக்களாகிறவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. பா.ஜ.க-வோ அங்கே இந்துக்கள் பலரும் கட்டாயமாக மற்றைய மதங்களுக்கு மாற்றப்படுவதாகக் கடந்த வருடங்களில் குரலெழுப்பி வருகிறது. அத்துடன், மதம் மாறுகிறவர்களைத் தடுக்கும் சட்டங்களைக் கொண்டுவரவேண்டும் என்றும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.
கேரள அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரங்களின்படி அங்கே மதம் மாறி இந்துக்களாகியிருப்பவர்கள் மொத்தமாக மதம் மாறியிருப்பவர்களில் 47 % ஆகும். மொத்தமாக 506 பேர் மதம் மாறியதாகத் தம்மைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்துக்களாக மாறியிருக்கும் 72 % தலித் கிறிஸ்துவர்களாகும்.
கிறித்தவ திருச்சபை 244 பேரை மற்றிரு மதங்களுக்கும் இழந்து 119 பேரைத் தன்னிடம் ஈர்த்திருக்கிறது. 144 பேரைத் தன்னிடம் ஈர்த்திருக்கும் இஸ்லாம் 40 பேரை இழந்திருக்கிறது. 222 பேரை மற்றைய மதங்களுக்கு இழந்த இந்துமதம் 241 பேரைத் தன்னிடம் ஈர்த்திருக்கிறது.
இஸ்லாத்துக்கு மாறியிருப்பவர்களில் 73 % பேர் இந்துக்களாகும். அவர்களில் 63 % பெண்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்