சகலவிதமான கிரிக்கெட் பந்தயங்களிலுமிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்தார் லசித் மலிங்கா.

“இது எனக்கு ஒரு விசேடமான நாள். இதுவரை காலமும் எனது T20 பந்தயங்களி என்னை ஆசீர்வதித்து, ஆதரித்தவர்களுக்கெல்லாம் நன்றி. எனது T20 காலணிகளுக்கு நான் முழுவதுமாக ஓய்வுகொடுக்க முடிவுசெய்துவிட்டேன்…..,” என்று ஆரம்பித்து சிறீலங்கா கிரிக்கட் சபைக்கும் தான் விளையாடிய கிரிக்கட் குழுக்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துத் தான் இனிமேல் இளவயதினரை ஊக்குவிப்பதில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற கிரிக்கட் வீரர் லசித் மலிங்கா.

T20 பந்து வீச்சாளர்களில் மிகச் சிறந்தவரென்று கருதப்படும் 38 வயதான மலிங்கா 2004 இல் ஆரம்பித்து 16 வருடங்களாகச் சர்வதேசக் கிரிக்கட் வானில் தனது திறமையையைக் காட்டிக்கொண்டே இருந்தவர். 2014 இல் சிறீலங்கா கிரிக்கட் குழுத் தலைவராகவும் மலிங்க நியமிக்கப்பட்டார்.

இந்தியன் பிரிமியர் லீக்கிலும் தனது சாதனையைப் பதித்துவிட்டுப் போகிறார் லசித் மலிங்கா. அந்த லீக்கில் 122 பந்தயங்களில் 170 விக்கட்டுகளை விழுத்தியவர் அவரே. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *