கிளாஸ்கோவில் மோடி அறிவித்த ஐந்து கட்ட “அமுத” வாக்குறுதிகள்!
இலக்கை இந்தியா 2070 இல் தான்எட்டும் என்றும் அவர் அங்கு உரை.
சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றபொருளாதார சக்தி மிக்க பெரிய நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில்உள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக்குறைத்துக் கட்டுப்படுத்த அது எடுக்கவுள்ள நடவடிக்கைகள் உலக அளவில் முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்படுபவை.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டின் கார்பன் குறைப்பு முன்மொழிவுகளை ஐந்த கட்டங்களாக வகுத்து நேற்று அறிவித்திருக்கிறார்.
உலகத்தலைவர்களுக்கு வழங்கிய அந்த ஐந்து அம்ச வாக்குறுதிகளை “அமுதங்கள்”(“elixirs”) என்று அவர் கிளாஸ்கோ மாநாட்டு உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.*. இந்தியா கனிம பெற்றோலிய எரிசக்தி இல்லாத அதன் சக்தித் திறனை 2030 ஆம் ஆண்டில் 500GW ஆக அதிகரிக்கும் -* 2030 ஆம் ஆண்டுக்குள் தனது மொத்த சக்தித் தேவையில் 50 வீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின்(renewable sources) மூலம் பூர்த்தி செய்யும்.
*. இந்தியா கனிம பெற்றோலிய எரிசக்திஇல்லாத அதன் சக்தித் திறனை 2030 ஆம் ஆண்டில் 500GW ஆக அதிகரிக்கும் –
* 2030 ஆம் ஆண்டுக்குள் தனது மொத்தசக்தித் தேவையில் 50 வீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் (renewable sources) மூலம் பூர்த்தி செய்யும்.
*இந்தியா அதன் மொத்த கார்பன் வெளியேற்றத்தை (carbon emissions) 2030 க்குள்ஒரு பில்லியன் தொன்களாகக் குறைக்கும்.
*அதே ஆண்டுக்குள் அதன் பொருளாதார நடவடிக்கைகளில் கார்பனின் தீவிரத்தை 45 வீதங்களால் குறைக்கும்.
*இறுதியாக கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியம் என்ற இலக்குக்கு (net zero emissions) குறைப்பதை 2070 இல் எட்டும்.-இவையே மோடி அறிவித்த ஐந்து அம்ச “அமுதங்கள்” ஆகும்.
“நான் உங்களுக்கு ஒரேயொரு வார்த்தையில் ஒர் உலக இயக்கத்தை அறிவிக்கிறேன். இயற்கையே அதன் அடிப்படையாக இருக்கும். அதுதான் வாழ்க்கை.(Life) சுற்றுச் சூழலுக்கான வாழ்க்கை முறை.(LIFE-Lifestyle For Environment) “என்று மோடி தனது உரையில் வாழ்க்கையைச் சூழலுடன் இணைத்து ஓர்இயக்கமாக அறிவித்தார்.
கிளாஸ்கோ பருவநிலை மாறுதல் மாநாட்டில் பிரதமர் மோடி வழங்கிய வாக்குறுதிகளில் குறிப்பிடக் கூடிய முன்னகர்வு இருப்பினும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களை அவை திருப்திப்படுத்தவில்லை. 2070 என்ற அவரது காலக்கெடு எதிர்பாராத ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்பன் வெளியேற்றும் அளவைப் பூஜ்ஜியம் என்ற இலக்குக்கு கொண்டுவருவதை (net zero emissions) இந்தியா2070 ஆம் ஆண்டிலேயே நிறைவு செய்யும் என்று அவர் தனது நாட்டின் சார்பில் சமர்ப்பித்த திட்ட மொழிவுகளில் தெரிவித்திருக்கிறார். நாடுகள் கார்பன் (CO2) வெளியேற்றும் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான காலவரையறை 2050 ஆம் ஆண்டு என்பதே கிளாஸ்கோ மாநாட்டின் மிகப் பிரதானமான இலக்கு ஆகும். இந்தியா அதிலிருந்து இருபது ஆண்டுகள் தள்ளி – 2070இலேயே-அந்த இலக்கை எட்டும் என்று அறிவித்திருக்கிறது.
அதேவேளை, உலகை மாசு படுத்தும்மற்றொரு பெரிய நாடான சீனா, தனது இறுதி இலக்காக 2060 ஆம் ஆண்டை அறிவித்திருக்கிறது.
இந்தியா ஆண்டு தோறும் 2,597 மெகா தொன் (megatonnes) கார்பன் வெளியேற்றத்துக்குப் பொறுப்பாக உள்ளது. ஆனால் அதன் அதிகரித்த சனத் தொகை காரணமாக ஏனைய முக்கிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தலைக்கு இவ்வளவுஎன்ற கார்பன் அளவு வீதம் இந்தியாவில் குறைவாக உள்ளது. நாட்டின் மின்சாரத்தேவையில் அரைவாசியை அது நிலக்கரி மூலம் பூர்த்திசெய்துவருகிறது.
-குமாரதாஸன். பாரிஸ்