காணி நில அளவீட்டால் மக்கள் பகுதிகளை சுவீகரிக்க முயற்சி மாதகலில் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்

கடற் படையினர்களின் தேவையின் நோக்கில் தனியார் காணிகளை அளவீட்டு வேலைகளை செய்ய வந்த நில அளவையாளர்களின் பணிகள், யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மக்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.

கடற்படைத்தளபதி பேச்சுவார்த்தையின் மூலம் இதை தீர்த்து தொடர்ந்து பணிகளை செய்ய முயற்சிகள் மேற்கொண்ட போதும் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் அந்தப்பகுதியில் நிலவி வந்தது.

சுமார் 1.6 ஹெக்டேயர் பரப்புள்ள காணியை கையகப்படுத்துவதே இவர்கள் நோக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.

மக்களின் ஜீவனோபாய தொழிலாகிய கடற்றொழில் இந்த சுவீகரிப்பு மூலம் வெகுவாக பாதிக்கும் என வட்டார மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முயற்சியால் மக்களின் பயன்பாட்டில் இருக்கும் போதிபுலம் மயானம் கடற்படையின் கட்டுப்பாடில் சென்றுவிடும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நடப்பில் கட்டுப்பாட்டில் இருக்குமிடத்தில் சிறுவர் நல்லடக்கம் செய்யுமிடமும் உள்டங்குவதாகவும் குறிப்பிடப்படுகிறது.ஏற்கனவே பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தியிருந்தும் இதை கையகப்படுத்த முயற்சிகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எடுப்தாக

கடிதம் மூலமும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த மக்களை, அடுத்தவாரமளவில் கூட்டம் ஒன்றில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகளையும் பங்குபற்ற அந்த ஊர்மக்கள் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதேவேளை 2020.10.08 ம்திகதி வெளிப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் கீழ் காணி அமைச்சரால் பகிரங்க தேவை கருதி காணி எடுத்தற்சட்டம் 5 இன் அடிப்படையில் காணி கொள்வனவு செய்யபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.