முதலாவது தடவையாக இந்தியக் குடிமக்களில் ஆண்களை விடப் பெண்கள் அதிகம்!

இந்தியாவில் மக்கள் கணக்கெடுப்பு [National Family Health Survey] நடாத்தப்பட ஆரம்பித்ததிலிருந்து முதலாவது தடவையாக நாட்டில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2005 – 2006 புள்ளிவிபரங்களில் சம அளவாக இருந்த ஆண்-பெண் எண்ணிக்கை, 2015 – 2016 இல் 991 பெண்களுக்கு 1000 ஆண்கள் ஆகியிருந்தது. 

“பிறக்கும் பிள்ளைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, குடிமக்களின் எண்ணிக்கையில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. நாம் பெண்கள் நலம், குடும்ப ஆரோக்கியம் போன்றவைகளிலும், பெண்களின் கல்வித்தரத்தை ஊக்குவித்தலிலும் செய்த திட்டங்கள் நல்ல பலனைத் தந்திருக்கின்றன என்றே இதைக் கவனிக்கவேண்டும்,” குடும்ப நலன், மக்கள் நலன் திணைக்களத்தின் காரியதரிசி தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்