பிரிட்டனில் வேகமெடுக்கும் “ஒமிக்ரோன்” வைரஸ்| பரவலை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் அரசு
உலகநாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கோவிட் 19 இன் திரிபடைந்த “ஒமிக்ரோன்” வைரஸ் தற்சமயம் வரை 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வேறு யார்யார் தொடர்பிலிருந்து வைரஸ் பரவ ஏதுவானவர்களாக இருக்கிறார்கள் என்பது தொடர்பான ஆய்வில் தேசிய சுகாதார சேவை (NHS TRACK and Trace) ஈடுபட்டுள்ளது.
தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது பேரில் ஆறுபேர் ஸ்கொட்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் நாளை 30-11-21 செவ்வாய்க்கிழமையிலிருந்து மீண்டும் பொதுமக்களுக்கான கட்டாய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக ஆண்டு 7 க்கு மேல் கல்விகற்கும் மாணவர்கள்,மற்றும் அனைவரும் மக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் முகக் கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பிரிட்டனுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பிசிஆர் PCR பரிசோதனை எடுக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் முன்னிலை பணியாளர்களுக்கும் வேறு நோய்நிலையிலிருப்போருக்கும் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் கோவிட் 19 Booster தடுப்பூசி ஏனையோருக்கும் வழங்குவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஜி7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசரமாக ஒமிக்ரோன் வைரஸ் குறித்ததான சந்திப்பில் ஈடுபடவுள்ளதாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஸ்கொட்லாந்தின் முதன்மை அமைச்சர் ,cobra கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரித்தானியப்பிரதமர் பொறிஸ் ஜோன்சனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.