15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40,000 ஆப்கானிய அகதிகளை மறுவாழ்வுக்காக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றன.

சமீப வருடங்களில் சுமார் 85,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலிபான்களின் கையில் மீண்டும் வீழ்ந்திருக்கும் அந்த நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதால் அதேபோன்ற பல மடங்கு பேர் அகதிகளாகத் தஞ்சம் கோரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அந்த நிலைமையை எதிர்கொள்ளவே ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா-வின் உதவியுடன் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக்கொள்ள ஒத்துக்கொண்டிருக்கிறது.

அந்த அகதிகளில் 25,000 பேரை ஜேர்மனியும், ஸ்பெயினும் பிரான்ஸும் தலைக்கு 2,500 பேரையும், 3,159 பேரை நெதர்லாந்தும் ஏற்றுக்கொள்வார்கள். ஐ.நா-வின் மூலமாக மறுவாழ்வுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளவிருகும் 60,000 அகதிகளில் இந்த 40,000 ஆப்கானிகளும் அடங்குவார்கள் என்று ஐ.ஒன்றியத்தின் அகதிகள் ஒன்றிணைப்பாளர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். குறிப்பிட்ட மறுவாழ்வுத் திட்டத்துக்காக அவர்கள் அந்தந்த நாடுகளுக்குப் போச்சேர எத்தனை வருடங்களாகும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மொத்தமான 60,000 பேரில் சுவீடன் 9,200 அகதிகளியும், பெல்ஜியம் 1,625. அவர்கள் ஐ.நா-வின் சர்வதேச அகதிகள் முகாம்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்றைய ஐரோப்பிய நாடுகள் சிறு தொகையினரை அகதிகளாக ஏற்றுக்கொள்ள முன்வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்