ஒமிக்ரோனால் முதல் மரணம் பிரிட்டனில் பதிவாகியது

திரிவடைந்த கோவிட் 19 இன் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு,முதல் மரணம் இன்று பிரிட்டனில் பதிவாகியுள்ளது.இந்த விடயத்தை பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை இதுவரை காலமும் கோவிட் 19 பரவாத அளவிற்கு திரிவடைந்த ஒமிக்ரோன் வேகமாக பரவுகிறது என சுகாதார துறையின் செயலர் சாஜிட் ஜாவிட் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் மூன்றாவது தடுப்பூசியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரித்தானிய பிரதமர் நேற்று விசேட உரையில் தெரிவித்திருந்ததை அடுத்து சுகாதார சேவை இணையத்தளம் மிக அதிக வருகைகளால் வேக முடங்கு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீடுகளில் கோவிட் தொற்றை பரிசோதிக்கத்தேவையான பரிசோதனை கருவியும் தட்டுப்பாடான நிலையை எட்டியுள்ளது.

இருப்பினும் மருந்தகங்களில் பெற்றைக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக பிரிட்டன் பிரதமர் அறிவிக்கின்றார்.

அதேவேளை வீடுகளில் இருந்த பணிசெய்யக்கூடிய வேலைகள் செய்வோர் ,வீட்டிலிருந்நது பணிசெய்யத்தொடங்குவது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று இரவு 7 மணிக்கு எதிர்க்கட்சித்தலைவர் கியர் ஸ்ராமர் நாட்டுமக்களுக்கு இன்றைய நிலை குறித்த அவசர நிலை குறித்து உரையாற்றவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.