COVID 19 இன் பரவல் பற்றி பிரிட்டனில் பேசப்படும் முக்கிய சில செய்திகள் ஒரே பார்வையில்

👉 வரும் கிறிஸ்மஸ் காலத்தில் வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள “கூடுதல் சிறப்புக் கவனிப்பு” எடுக்குமாறு பிரிட்டன் பிரதமர்  பொரிஸ் ஜோன்சன்  மக்களைக் கேட்டுக்கொள்கிறார். தேவையேற்படும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் உங்கள் உறவினர்களை சந்திப்பதற்கு முன் கோவிட்டுக்கான முன் பரிசோதனை செய்வது உட்பட முக்கிய கவனங்களை எடுக்குமாறு பொறிஸ் ஜோன்சன் கேட்டுக்கொட்டுள்ளார்.

👉ஆரம்பகால ஆய்வுகள், ஓமிக்ரான் மாறுபாடு  குறைவான அளவிலேயே கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கின்றன, டெல்றா போன்ற மற்ற திரிபுகளைக் காட்டிலும் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்ட குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.

👉வைரஸ் பற்றிய புதிய புதிய தரவுகள் “நல்ல செய்திகளாக” இருப்பதாக தெரிவிக்கும் விஞ்ஞானிகள், மிகப் பெரிய அலை ஒன்றினால் இன்னும் தேசிய சுகாதார சேவையை (NHS ஐ) மூழ்கடிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்

👉டிசெம்பர் மாதம் 22ம் திகதி புதன்கிழமையன்று கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை பிரிட்டன் முழுவதும் முதல் முறையாக 100,000 ஐத் தாண்டியது இன்னொரு எச்சரிக்கை செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

👉டிசம்பர் 26ம் திகதி முதல் அருந்தகங்கள்(Pubs), திரையரங்குகள் மற்றும் உணவகங்களில் ஆறு பேருக்கு மேல் சந்திக்கக் கூடாது என்ற புதிய விதிகள் வேல்ஸில் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

👉ஸ்கொட்லாந்து டிசெம்பர் 27ம் திகதியிலிருந்து மூன்று வாரத்துக்கு இரவு விடுதிகளை மூடுமாறு பணித்துள்ளது.

👉மேலும் வடக்கு அயர்லாந்தில் இரவு விடுதிகள் திங்கட்கிழமை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாதாக அதே நாள் GMT 06:00 மணி முதல் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

👉அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒமிக்ரோன் மாறுபாட்டின் வெளிப்பாட்டிற்கு தனது நிர்வாகமோ அல்லது தனது பதிலையோ தர மறுத்துள்ளார், “யாரும்” அதைக் கணிக்க முடியாது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

👉ஐரோப்பாவை பொறுத்த மட்டில் ஸ்பெயின், கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பாராத அளவில் அதிகரித்து வருவதால் வீடுகளை விட்டு  வெளியில் கட்டாயமாக முகக் கவசங்களை அணிவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.