அட்டவிகாரம்


மெய்தீண்டா விரல்களுக்குள் ஒளிந்திருக்கும் தீக்குணத்தைப்பொய்தீண்டி வெளிப்படுத்தப் புன்னகைக்கும் மிருகமெனசெய்யாத நல்லனெவும் செழிக்கும் கெட்டனவும்பொய்யாகும் வாழ்வில் பொறாமையாய் விரிந்திடுமே….
வெட்கத்து வெளிப்படும் நான்வகை குணமழிந்துஎட்டும் வெளிபடுத்தும் தகாத செயலதனில்கிட்டுமோ பெருமை கிடைத்தற் கரியதாய்துட்டுகள் செய்யும் துயரங்கள் மாளாதே…
கொங்கை சரிந்திடவே குலமகளும் விலையாகமங்கையெனும் பொருளழித்து மாசுகளைத் தந்தேபங்கம் விளைவிக்கும் பாதகர்கள் நிறைந்திடவேதங்குமோ நலனும் தரணியில் சிறந்தே.
காமம் குரோதம் உலோபம் மோகம்மதம் மாற்சரியம் இடும்பை அசூயைஎண்வகை தீக்குணம் எழுந்திடும் ஒருவர்க்குஎண்ணத்தில் நல்லவை இருக்குமோ சொல்வீரே..
கவித்தென்றல் சௌ. நாகநாதன் சின்ன இரெட்டையூரணி