கொரோனாவும், கொடுமழையும்

வான் மேகமே – உன்
கொடுமழையால் அவதியன்றோ?

உன் வரவால் – எங்கள்
சிந்தைமுழுதும் கலக்கமன்றோ?

முன் கொரோனா – பின்
கொடுமழை விந்தையன்றோ?

தீராத் துயரில் – எம்
மக்கள் அவதையன்றோ?

இன்ப மழையாம் – எமது
வான்மழையே உம்மை
வரவேற்கிறோம் – ஆனால்

இன்றோ, என்று தணிவாய்
என்று எண்ணி
திகைத்து நிற்கிறோம்….

வெளியே சென்றிட தயக்கம்…..
தடைப்பட்டது உலக இயக்கம்….
உள்ளங்களில் கலக்கம்….
கண்ணில் மறைந்தது தூக்கம்….
கொரோனா ஏற்படுத்தியத் தாக்கம்….

நோய் நீங்க
வேண்டும் என்ற ஏக்கம்….

போக வேண்டும் இந்த முடக்கம்!
காண வேண்டும் புதிய தொடக்கம்!

கொன்று குவித்தது கொரோனா
அந்நாளிலே….
வென்றுவந்து உயர்ந்து நின்றோம்
இந்நாளிலே….

கொரேனாவும் கொடுமழையும்
வந்தது வாழ்விலே…..
கடந்துசென்று நன்று
வாழ்வோம் வருநாளிலே….

எழுதுவது: மாலதி சுரேஷ் கோ. கோவை