எதைச் சொல்ல

கவிதைக்கு கற்பனை அழகென்பேனா!
காதலுக்கு அழகு தேவையில்லையென்பேனா!
குடும்பத்திற்குத் தேவை நற்குணமென்பேனா!
உறவுக்கு உறுதி உதவியென்பேனா!
நட்புக்கு சிறப்பு நல்நடத்தையென்பேனா !
மொழிக்கு அழகு தமிழேயென்பேனா !
மொழியும் வார்த்தைக்கழகு அன்பேயென்பேனா !
சமூகம் திருந்த
சாதிக லொழிகவென்பேனா !
சமத்துவம் பெருக- அனைவரும்
சரிநிகரென்பேனா !
உலகத்தில் சிறந்தது
ஒழுக்கமென்பேனா !
அகிலத்தைக் காக்கும் கடவுள்
அன்னையென்பேனா !
உலகத் தமிழரை
இணைக்க வைத்தது ஊடகமென்பேனா !
ஆதித் தமிழரின் அடையாளமே
படைப்புகளென்பேனா !
ஆதவன் வணக்கமும்
அறுவடை வணக்கமும்
தமிழர் திருநாளென்பேனா !
புதுநெல்லெடுத்து பொங்கலிட்டதை-நமது
புத்தாண்டென்பேனா !
எதைச் சொல்லி
என்னுயிர்தமிழர்களுக்கு வாழ்த்திடுவென்பேன் !
பல கோடி வார்த்தைகள்
தன்னகத்தே இருந்தாலும் தமிழரின் பெருமை சொல்லி மாலாது!!


எழுதுவது : திருமதி.சா.தனலட்சுமி கோவிந்தராசு.