புதுப்புது வைரசும் புத்தாண்டும்
குழந்தைகள் முதல்
குடுகுடு முதியவர்கள் வரை
குதித்தெழும் காளைகளின்
குத்திட்டு நிற்கும் கொம்புகளை
குறிபார்த்து அடக்கிடும்
தமிழரின் பெருமைமிகு வீரத்தை
தனியொருவனாய் அடக்கும் வீரத்தை
தரணியெல்லாம் கொண்டாடும்
தமிழர் திருநாளை
குடும்பத்திலுள்ளவர்கள்கூட
கூட்டமாய் சேராமல்
ஆளுக்கொரு முகமுடியுடன்
அலையவிட்ட கோலமென்ன!
நள்ளிரவில் ஊரடங்கு!
ஞாயிறுக்கும் ஊரடங்கு என்றால்
பொழுதுதான் விடியுமா!
பொழைக்கத்தான் முடியுமா!
தணியாத புத்துணர்வு தருகின்ற புத்தாண்டில்!
தை மகளை
பதைபதைக்க வைக்கும்
புதுப்புது வைரசால்
புலம்பும் மக்களுக்கு
புன்னகையோடு
புத்தாண்டு வாழ்த்துச் சொன்னால்
புதுமையாய்த் தோணாதோ !
எப்படித் தோன்றினாலும்
எந்தமிழ் மக்களே
எண்ணத்தில் விளைந்ததை
ஏட்டிலே பதிக்கின்றேன்.
நாட்டிலே உலாவரும் நோய்க்கு-வரும்
பாட்டிலே தடுப்பூசி போடுவோம்
பார்போற்றும் தமிழர்த்திருநாளைப்
போற்றுவோம்!
எழுதுவது.
சா.தனலட்சுமி கோவிந்தராசு.