தமிழின் இனிமை

இன்பத் தமிழே
இளந் தமிழே
எழுச்சி யூட்டும்
சிங்கத் தமிழே

வண்ணத் தமிழே
வளர்ச்சி யூட்டும்
வாழைத் தமிழே
எண்ணத் தமிழே
ஏக்கத் தமிழே

உள்ளத் தமிழே!
உயர்ச்சி அடையும்
உண்மைத் தமிழே
உன்னை வணங்கும்
உயர்வுத் தமிழே!
என்னை வளர்க்கும்
சபையோர்க்கும்
அவையோர்க்கும்
வணங்கும் தமிழே!

அழகுத் தமிழே
அறிவுத் தமிழே
ஆசைத் தமிழே
அன்புத் தமிழே!
ஆழவேரூன்றி
அடர்ந்த தமிழே!
சிற்பக் கல்லெடுத்து
செதுக்கி பாா்த்தேன்
செந்தமிழே!!!
உளிக்கொண்டு
உடைத்துப்பார்த்தேன்
வண்ணத் தமிழே!!!
வடிவுத் தமிழே
சின்னத்திரையில்
சிங்காரம் செய்து
எண்ணத்திரையில்
எழுச்சியை உண்டாக்கி
உள்ளத்திரையில்
உருகித் தவிக்கும்
உயர்வுத் தமிழே!
வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!
சங்கத் தமிழில்
சான்றொப்பமிட்டு
இன்னிசைத் தமிழில்
இசைப்பாடச்செய்து
எட்டுத்தொகையினை
எழுத்தாக்கி !!!

பத்துப்பாட்டில்
பாட்டெழுதி
பதிணெண்கீழ்கணக்கில் மருத்துவம் செய்து
திரிகடுகத்தில்
தீபம் ஏற்றும்
தேன் சுவைத்தமிழே

பக்தி இலக்கியத்தில்
பரவசம்யூட்டி
இக்கால இல்க்கியத்தில்
எழுச்சியூட்டி
இனிய கவிதை
படைத்து
நாயக்கா்காலத்தில்
நாடகம் செய்து
பல்லவர் காலத்தில்
பண்பாடு வளர்த்த
பைந்தமிழே!!!
பக்தியில் பரவசம்
செய்து இன்பத்தில்
இளைப்பாறச்செய்யும்
இளந்தமிழே இளந்தமிழே
இளந்தமிழே
இன்பத்தமிழே
வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

எழுதுவது ; முனைவர் மு.முருகேஸ்வரி,
வத்தலக்குண்டு,தமிழ்நாடு.