கவிநடை

சிரிப்பின் அழகில்

புன்னகை அழகு
என்றேன்…
மெளனமாக சென்றாய்!

கண் சாடையே
கவிபாடுதே என்றேன்..
விழி மூடிச் சென்றாய்!

பாதக்கொழுசு
ஓசையில்…
பாவி மனம் தவிக்குது
என்றேன்…
கள்ளச் சிரிப்புடன்
கடந்தாய்!

நேச சிரிப்பில்..
உயிர்க்குடுவை..
ஊசலாடுகிறது என்றேன்…
மெல்லிய சிரிப்பை
பதிலாய் தந்தாய்!

ஒ௫ நாள்
காணமால் போனாலும்…
இதயம் இதமாய்..
இயங்குவதில்லை..
என்றேன்…
கடைக்கண் பார்வையில்…
கடந்தாய்!

உதடு குவித்து
உதி௫ம்…
வார்த்தையை கேட்க..
ஓராண்டாய் தவம்
என்றேன்…
பதிலேதும் சொல்லாமல்
பாவிமக பறந்து
விட்டாளே!

எழுதுவது : ர.ஜெயபாலன்.