சுற்றுச்சூழல் காப்போம்
மனித குற்றங்களால் மாசுபட்டு நிற்கிறது உலகம்,
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை தான்,
சுற்றி சுற்றி பார்த்தாலும் சுற்றுச்சூழல் சுக்கு நூறாய் சிதைந்து கிடைக்கிற அவலநிலை,
இளைய தலைமுறைக்கு நாம் தருவது என்ன?
கார்மேகம் காணமல் போய்விடுமா?
தென்றல் காற்று வசந்தமாய் வருடாதா?
வானவில் ஏட்டினில் மட்டும் தானா?
மேகம் சூழ்ந்த வானம் இனி பாலைவனம் தானா?
வனங்களின் அழிவில் வாழ்வாதாரம் இழந்த உயிரினங்கள் எத்தனையோ?
யானை கட்டி போரடித்த காலம் போய் உணவுக்காக போராடும் காலம் தானா?
நீர்நிலைகளில் பாலம் கட்டிய காலம்மாறி பாலங்களாக நிலங்களா?
காடுகளை அழித்து மரங்களை வெட்டுவது காசுக்காகவா?
மனிதா! விழித்தெழு!
இளையதலைமுறை இன்பமாய் வாழ நீ மாற்றம் கொள்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் மாசை கட்டுபடுத்து.
இயற்கை சூழ்ந்த உலகினை, செயற்கை அற்ற வளங்களால், மரபு மாறா சூழலை தலைமுறைக்கு போதிப்போம்.
சுற்றுப்புறத்தை பேணி, சூழலை சூட்சுமமாய் மாற்றும் வித்தையை கற்று தந்து களிப்புற வாழ வழி செய்வோம்.
செயற்கையை செப்பனிட்டு மாற்றி, அல்லன விலக்குவோம்.
இயற்கையை நேசிப்போம். இனியதை இளைய தலைமுறைக்கு போதிப்போம்.
எழுதுவது ; முனைவர் ந.மணிமேகலை,
ந.கந்தம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம்