நீல் யங்குக்கு ஆதரவாக ஸ்போட்டிவையிலிருந்து விலகும் ரசிகர்களும் இன்னொரு கலைஞர் ஜோனி மிச்சலும்.

“மனிதர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையில்லாதவர்கள் பரப்பும் பொய்களை விற்றுச் சம்பாதிக்கும் ஸ்போட்டிவையில் என் இசை இருக்கலாகாது,” என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார் இசைக்கலைஞர் நீல் யங். அவரையடுத்து அவருக்கு ஆதரவாக அதே காரணத்தைக் காட்டித் தனது இசையையும் அத்தளத்திலிருந்து விலக்கச் சொல்லிவிட்டார் இசைக்கலைஞர் ஜோனி மிச்சல்.

நீல் யங்கின் படைப்புக்களை விலக்க ஆரம்பித்ததால் கோபம் கொண்ட அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் பலரும் ஸ்போட்டிவை தளத்திலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்று இசைச்சஞ்சிகைகள் எழுதியிருக்கின்றன. அது மட்டுமன்றி, விலகுபவர்கள் மற்றவர்களையும் பொய்களைப் பரப்பிவருபவர்களை ஆதரிக்கும் ஸ்போட்டிவை விலக்காதவரை அதிலிருந்து விலகவேண்டுமென்று குரல்கொடுத்து வருகின்றனர்.

#DeleteSpotify எனப்படும் தொடுப்பு சமீப நாட்களில் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவிவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்