உதிரா உன் இதழ்கள்

பேசிய வார்த்தையின்
சுவை
குளிர் தேசத்துப்
பனிக்கூழ்போல்
தேகத்தைக் குளிரச் செய்கின்றது

உன் நினைவுகளின்
எதிர் உணர்வுகளைத்
தேடித் திரிந்து விமர்சிக்க
என் எண்ணங்கள் மட்டும்
போகப் பொருளென
என்னை அணைக்கின்றது

அன்பின் நேயங்கள்
இச்சை மிகுந்து
முகத்தைப் பூட்டிக் கொண்டு புன்னகைக்க

பூச்சூடி பொட்டிட்டு
உடையுடுத்தி
உன் எதிரே
என் நாணம் மட்டும் பேசிட

ஒத்திகை ஒன்றை கணக்கிட்டுக்கொண்டே
உள்ளம்
உழைக்கின்றது
உதிரா உன் இதழ்கள்
சொட்டும்
மொழி மணத்தை நுகர்வதற்காக.!

எழுதுவது : ராதை சுப்பையா