செயற்கை குளிர்பானம் அடிக்கடி குடிப்பவர்களா|அது நமக்கு நாமே தீங்கு செய்வதாகும்

நவீன காலத்தில் இயற்கை குளிர்பானங்களை
மறந்து செயற்கை குளிர்பானங்களுக்கு அடிமையாகிவிட்டோம் . பழங்களின் மூலம் குளிர்பானங்கள் தவிர்த்து செயற்கை சாயங்கள் , தூள்கள் மூலம் தயாரித்து குடிக்கின்றோம். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு மட்டுமே தவிர வேறு எதுவும் நிகழ்வதில்லை. இவைகளை குடித்து நாமே நமது உடல்களுக்கு நோய்களை ஏற்படுத்திற்கொள்கின்றோம் .

இதன் மூலம் பலவகையான நோய்கள் ஏற்படுகின்றன.
செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் பின்வரும் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

🔴சர்க்கரை
🔴புற்றுநோய்கள்
🔴இதய நோய்கள்
🔴உடல் பருமன் அதிகரித்தல்
🔴கல்லீரல் பாதிப்பு
🔴மரண அபாயம்
🔴பிரசவச்சிக்கள்
🔴சிறுவயதில் பெண்குழந்தைகள் பூப்பெய்தல்
🔴சிறுநீரகத்தில் கல் உண்டாதல்.
🔴குடல் புண்

என பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.

அதுமாத்திரமின்றி விரைவாக மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

பழங்கள் மூலம் குளிர்பானங்கள் தயாரித்து குடிப்பதன் மூலம் எமது உடலுக்கு சக்தி கிடைப்பது மாத்திரமின்றி உடல் வளர்ச்சி, ஆரோக்கியம்,
உடல் சமநிலை
என்பவற்றை பேணி பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகின்றது.
மேலும் இது மாத்திரமின்றி பல நன்மைகளும் எமக்கு ஏற்படுகின்றன.எமது உடலை பாதுகாப்பது நமது கடமை உடல் எமக்கு இறைவனால் தந்த அருட்கொடை

ஒரு போதும் எமது உடலுக்கு நாமே தீங்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது.அது நாம் நோயை விலைக்கு வாங்குவதற்கு சமனாகிறது.

எழுதுவது : பஹ்ரியா பாயிஸ்
கொடேகொடை
ஹெம்மாதகம.