அம்மா

அம்மா,வெறும் வார்த்தை அல்ல;

என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணம் செய்யும்

என் அழகு தேவதை-அம்மா!

என் அழுகுரல் கேட்டு கண் கலங்கிய முதல் நாள் ,

இந்த குட்டி ஏஞ்சலை பெற்றெடுத்த

என் செல்ல தேவதையே!

என் சிறுவயது முதல் இந்த நொடி வரை

என் ஆசைகள் எல்லாம் நிறைவேற்றிய பாசம் ஆனவளே!

நான் போட்டி தேர்விற்காக சென்னைக்கு சென்றபொழுது ,

என்னை உற்சாகத்துடன் வழியனுப்பிய சிங்கப்பெண்ணே!

சென்னையில் விடுதியில் இருந்த பொழுது

உன் சமையலை சாப்பிடுவதற்கு ஏங்கிய நாட்கள்

பல உண்டு!

பொங்கல் ,தீபாவளி, என் பிறந்த நாள் எப்பொழுது

வரும் என காத்துக் கொண்டிருப்பேன்!

நான் சென்னையில் இருந்து வீட்டிற்கு பயணம் செய்யும்பொழுது,

அலைபேசியில் என்னை அழைத்து

உனக்கு பிடித்ததை சமைத்து வைத்திருக்கிறேன்

என்று கூறுவாய்!

அந்த நொடிப் பொழுது எனக்கு பேரானந்தமாக
இருக்கும் .

நான் பல போட்டிகளில் வென்று

கோப்பைகளுடன் வரும்பொழுது கிடைக்கும்

மகிழ்ச்சியை விட நூறு மடங்கு பேரானந்தமாக இருப்பேன்!

இன்றும் என்னை அழகு பார்த்து அன்புடன் வளர்க்கும்

என் அன்பு தேவதைக்கு எழுதும் என் முதல் கவிதை-இதுவே !

என்னுடைய அன்பை உன்னிடம் வெளிக்காட்டியதில்லை;

எனக்கு உன்னிடம் காட்டவும் தெரியாது
.
ஏன் தெரியுமா?

அம்மா- இந்த ஒரு வார்த்தையிலேயே அனைத்தும் அடங்கும் .

நான் கோபமாக பேசினாலும், கண்டு கொள்ளாவிட்டாலும்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்

என்னை அழகாய் , அன்புடன் பாசத்துடன் ,

பாதுகாப்புடன் ஆரத்தழுவிக்கொள்ளும்

“இந்த உலகின் தலைச்சிறந்தவளே”-
என் அம்மா!

எழுதுவது :
S.சுபாஷினி
M.A.,M.phil.,B.Ed.,
கரூர்