வைரமான உடன்பிறப்பு

உற்றதொரு உடன்பிறப்பே
உயர்வான உயிர்பிறப்பு
உடையாது உணர்ந்திடவே
உருவான நாளிதுவே!
பெற்றவரின் பெருமகிழ்வு போற்றிடவே உடன்பிறந்து ஒன்றாக உயர்ந்திடுவோம்

விட்டுப் பிரியா விலையற்ற வேதமிது
வெட்டி விடாது வலுவூற்றி வாழ்ந்திடு
கெட்டு விடாத
குடும்பத்தில் உள்ள
கட்டமைப்பு நம்பிறப்பு.
கோடிவந்தும் குறையாது கொலுவிருப்போம்

சுட்ட வார்த்தை
சுகமான தில்லை
சட்டென பொறுத்து
சரிபடுத்தி சேர்ந்திடு
பெற்ற தாயவள்
பெருமிதம் கொண்டொழுக
போற்றிடு பாசத்தை
பேணிடு நும்பிறப்பை

கலியுக காலத்தில் கசப்பான நிலையுணர
கலந்த சகோதரம்
சண்டையிட்டு
கலைவதை
கட்டிவைப்போம் மீண்டும் கூடிவாழ்வோம்
கெட்டியாய் அணைத்து
குணமதில் குடியிருப்போம்

உறவுக்கு சிகரமே
உடன்பிறந்த வைரமே
ஒருபிழை செய்தாலும்
ஒற்றுமை உடையாது
உடன்பிறப்பை ஊட்டிடுவோம்
ஓருயிராய் ஒடுங்கிடுவோம்.

எழுதுவது:
உத்திராபதி இராமன் DSP, ஈப்போ மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *