இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Dornier 228 முதல் தடவையாக பயணிகள் சேவையில் இறங்குகிறது.
இந்தியாவின் தனியார் விமான நிறுவனமான அலையன்ஸ் எயார் இன்று முதல் தடவையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Dornier 228 விமானத்தைப் பயணிகள் சேவையில் பாவிக்கிறது. இந்தியத் தயாரிப்பு விமானமொன்று நாட்டின் தனியார் நிறுவனமொன்றால் பயணிகளுக்காகச் சேவையில் விடப்படுவது இதுவே முதல் தடவையாகும். இது டிபுருகார் [அஸாம்] – பாஷிகட் [அருணாச்சல் பிரதேசம்] நகரங்களுக்கிடையே தனது முதலாவது சேவையை ஆரம்பித்திருக்கிறது.
இந்தியக் கடல் எல்லைக்காவல், இராணுவம், கடற்படை ஆகியவற்றால் இந்த ரக விமானங்கள் ஏற்கனவே பாவிக்கப்பட்டிருக்கின்றன. 2017 முதல் இந்த ரக விமானங்கள் பயணிகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டன. வானிலிருந்து படங்கள் எடுத்தல், படையினர் போக்குவரத்து, உபகரணங்கள் போக்குவரத்து போன்றவைக்கு இந்த ரக விமானங்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன.
ஹிந்துஸ்தான் ஏரோனொடிக்ஸ் நிறுவனத்திலிருந்து 17 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய Dornier 228 விமானங்கள் இரண்டை அலையன்ஸ் எயார் வாடகைக்குப் பெற்றிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்