நிஸ்ஸான் நிறுவனம் டாட்ஸன் வாகனத் தயாரிப்புக்களை இந்தியாவில் நிறுத்துவதாக அறிவித்தது.
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வாகனங்களிடையே தனது விற்பனையைக் கணிசமான அளவில் அதிகரிக்கும் குறிக்கோளுடன் களத்தில் குதித்தது நிஸ்ஸான். ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் சென்னையிலிருக்கும் தனது தயாரிப்பு ஆலையையும் மூடிவிடப்போவதாக நிஸ்ஸான் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்னரே இந்தோனேசியா, ரஷ்யா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளிலும் தனது குறிக்கோள் நிறைவேறாததால் 2020 லேயே நிஸ்ஸான் நிறுவனம் தயாரிப்பு விற்பனை ஆகியவற்றை நிறுத்திக்கொண்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் தொடர்ந்தும் விற்கப்படும் என்றும் டாட்ஸன் கார் உரிமையாளர்களுக்கு வேண்டிய உதிரிப்பாகங்களும், சேவைகளும் உறுதி கொடுக்கப்பட்டது போலவே தொடரும் என்றும் நிஸ்ஸான் நிறுவனச் செய்தி குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்