லண்டனில் பீரங்கிகள் ஒலிக்க எலிசபெத் மகாராணி தனது 96 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பிரிட்டிஷ் அரசின் நீண்டகால அரசியாக இருந்த எலிசபெத் மகாராணி வியாழனன்று தனது 96 வது பிறந்த தினத்தைத் தனடு சண்டிரிங்காம் தோப்பில் கொண்டாடினார். அவரை வாழ்த்தி இராணுவத்தின் இசைக்குழு ஒலிக்க லண்டனிலும், விண்ட்சரிலும் பீரங்கிகள் மரியாதைக்காக வெடிக்கப்பட்டன.
தனது உடல் நலம் கருதி இவ்வருட ஆரம்பம் முதலே பெரும்பாலான அரச கருமங்களிலிருந்தும், பொதுக் கூட்டங்களிலிருந்தும் அவர் விலகியிருக்கிறார். எனவே அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அமைச்சரவையைச் சேர்ந்தவர்க்ளும் அவருக்கு வாழ்த்துக்களை அனுப்பி வைத்தனர். இதே தினத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் 70 வருடமாக பிரிட்டனையும் கொமன்வெல்த் ஆளும் மகாராணிக்கு வாழ்த்தைத் தெரிவித்தார்.
1952 பெப்ரவரி மாதத்தில் தனது தந்தை ஜோர்ஜ் திடீரென்று இறந்ததும் பிரிட்டனின் முடியை அவர் சூடிக்கொண்டார். அச்சமயத்தில் அவர் ஆஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கும் அரசியாகினார். ஹரி ட்ரூமன் அமெரிக்காவையும், ஸ்டாலின் சோவியத்தையும், மா சேதுங் சீனாவையும் அச்சமயத்தில் ஆண்டு வந்தனர். ஐக்கிய ராச்சியத்தின் தலைவராக இருந்தவர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்