புவித்தாயின் கோலம்
புவித்தாயின் கோலம்
பச்சை பட்டு உடுத்தி பளீரென சிரித்தவள்//
காய்ந்த சருகாக பொலிவிழந்து நிற்கின்றாள்//
பட்டாடைகளான மரங்களை அழித்து விட்டான் //
மனிதன் என்றே //
நெளிந்து வளைந்த வனப்பைக் கொண்டவள்//
தேகமெல்லாம் சுருங்கிப் போய் கிடக்கின்றாள் //
உடலான ஆறுகளை ஆக்கிரமித்து கொண்டான்//
மனிதன் என்றே //
மேனி வருடிய தென்றலாள் அவள்//
மூச்சு விடவே திணறுகின்றாள்//
உயிர் காற்றையும் நஞ்சாகினான் //
மனிதன் என்றே //
இயற்கை அன்னையின் கொடைகளை நினைப்போம்//
மானுடமே வாழும் இந்த வாழ்வுமுறை//
வரமா சாபமா சிந்திப்போம் //பு
வித்தாயின் புலம்பலை உணர்வோம்
செல்விமிக்கேல்
கூட்டப்புளி