உறங்கா உள்ளம்| கவிநடை
உறங்கா உள்ளம்
உனக்கானவள் நான் மட்டுமே மாமா!!
உன்னை மட்டுமே நிதமும் நினைக்கிறேன்!!
எனக்காக நீ என்ன செய்தாய்?
என்னவனே அன்பைப் அள்ளிக் கொட்டினாய் !!
நான் செய்த புண்ணியம் நீயல்லவோ?
நானே உனக்கு என்றும் நிலையானவள்!!
தானே முன்வந்து என்னை ஏற்றுக் கொண்டாய்!!
தாய்தந்தைப் பாசத்தை எனக்கு அளித்தாய்!!
மாற்றுத்திறனாளியான எனக்கு மறுவாழ்வு தந்தாய்!!
மானிடமே போற்ற என்னைப் படிக்க வைத்தாய்!!
ஊரெல்லாம் என்னைப் பாராட்டிப் பேசும்போது
ஊற்றுப் பெருக்கைவிட ஆனந்தம் அடைந்தாய்!!
வெறும் வேடிக்கைப் பெண்ணாக இல்லாமல் ,
வெற்றிக் கோப்பைகளைப் பெற்று உனக்களிப்பேன்!!
நாளெல்லாம் நான் வாங்கும் மூச்சாக நீ!!
நான் மட்டுமே உன் சுவாசக்காற்று!!
உன்னை அன்புத் திரவியமாகப் பாதுகாப்பேன்!!
உறங்கா உள்ளாய் என்றும் நினைத்து !!!…
ச.மஞ்சுளாதேவி, கரூர்