உயிர்ப் பாதுகாப்பு ஆபத்து | மக்கள் மிக கவனமெடுக்க வேண்டிய காலம்
நாட்டில் எதிர்நோக்கும் நெருக்கடியான இந்தக்காலங்களில், மக்கள் தங்களை மிக கவனமெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கையிருப்பில் குறைந்தளவு மருந்துகளே இருப்பதால் மருந்துப்பொருள்கள் விரயமாக்கப்படாது தவிர்க்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துகள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அதிலிருந்து மீளவைக்க கடும் பிரயத்தனம் எடுக்க வேண்டி ஏற்படலாம் என்றும் அதனால் விபத்துகளை தவிர்க்க மக்கள் தங்களாலான கவனத்தை அதிகூடியளவு எடுக்க வேண்டும் எனவும் மருத்து அதிகாரிகள் சங்கம் குறிப்பிடுகிறது.
தற்சமயம் கைவசம் இருக்கும் மருந்துகள் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்ட மருத்துவ சங்கம், குழந்தைகள் நலனில் போதிய கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளது.
முழு நாட்டிலும் இருக்கும் போக்குவரத்து சுகாதார சேவைகள் சீர்குலையும் நிலைகளில் இருப்பதால் உயிர் பாதுகாப்பு என்பது ஆபத்தான நிலைக்கு மாறியுள்ளது எனவும் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்தக்காலங்களில் மக்கள் தங்களை அதிகூடிய கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.