உக்ரேனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அடுத்த நாளே கருங்கடல் துறைமுகத்தை ரஷ்யா தாக்கியது.

ஐ.நா-வின் பொதுக்காரியதரிசியின் பங்களிப்புடன் ரஷ்யா, துருக்கி, உக்ரேன் நாடுகள் உக்ரேனின் தானியக் கப்பல்களைக் கருங்கடல் துறைமுகத்திலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. கருங்கடலின் மூன்று உக்ரேன் துறைமுகங்களில் உக்ரேனின் கப்பல்களிருக்கும் தானியத்தை உலகச் சந்தைக்கு அனுப்ப அவ்வொப்பந்தம் வழிவகுக்கும் என்று சர்வதேச மகிழ்ச்சி எழுந்தது. அதையடுத்த, நாளே குறிப்பிட்ட மூன்று துறைமுகங்களிலொன்று ரஷ்யாவினால் தாக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 25 மில்லியன் தொன் தானியங்கள் குறிப்பிட்ட துறைமுகங்களிலிருந்து தேவையான நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்படத் தயாராக இருக்கின்றது. உலகத் தானியச் சந்தையில் பெருமளவில் உயர்ந்த தானிய விலையானது குறிப்பிட்ட ஒப்பந்த நற்செய்தியைக் கேட்டதுமே 6 % ஆல் குறைந்தது. உக்ரேனிடமிருந்து தானியங்களை வடக்கு, கிழக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் இறக்குமதி செய்வது வழக்கம். பெருமளவில் வறிய நாடுகளான அவற்றின் மக்கள் சமீப காலத்தில் அங்கே ஏற்பட்டிருக்கும் விலையுயர்வாலும், தானியங்களுக்கான தட்டுப்பாட்டாலும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள்.

ரஷ்யா, உக்ரேன், துருக்கி ஆகிய நாடுகளின் ஒப்பந்தப்படி வரும் ஓரிரு வாரங்களுக்குள் அந்தத் தானியங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்குப் போச்சேரும் என்று கணிக்கப்படுகிறது. ரஷ்யாவின் தாக்குதலின் பின்னர் அவ்வொப்பந்தம் பற்றிய சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *