தாரக மந்திரம் | கவிநடை
பிறரை நம்பி வாழ்வதை விட உன்னை நம்பி வாழ்ந்து பார்; தன்னம்பிக்கை மனதில் துளிர் விட்டு எழும்…
🌟பாதை தெளிவாக இருந்தால் உன் பயணம் தெளிவாக இருக்கும்…
🌟உன்னை தேவையில்லை என்று நினைக்கும் உறவுகளிடம் இருந்து விலகி இரு…
🌟உன்னை தேடும் உறவுடன் உண்மையாக பழகு…
🌟நீ தேடும் உறவை விட உன்னை தேடும் உறவு உன்னை விட்டு செல்லாது…
🌟பணம் இன்று வரும் நாளை போகும்;
வாழ்க்கையில் நல்ல பாதையில் செல்லும் மனிதர்களை வழி நல்ல நடத்துவது குணமே…
🌟வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைய முயற்சியும்;பயிற்சியும்; தன்னம்பிக்கை தாரக மந்திரம் மனதில் உறுதிக்கொள்…
🌟வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பார் பிறரை வாழ வைத்துப்பார்…
🌟உன்னிடம் பேச விருப்பம் இல்லாதவர்களிடம் விலகியே இரு…
🌟தகுதியற்ற மனிதனின் கையில் கூழாங்கல்லாய் இருப்பதை விட
தகுதியான மனிதனின் கையில் வைரக்கல் ஒளிரும்
வைரக் கல்லை இருப்பது மேல்…
🌟பிறரிடம் உதவி கேட்டு உன்னை பிறர் அலட்சியப்படுத்தும் போது கவலைப்படாதே…
🌟உனக்காக உதவி செய்வதற்கு இறைவன் இருக்கிறார்…
🌟உன் மேல் நம்பிக்கையிருந்தால் பிறர் உதவி
தேவையில்லை…
🌟பிறரின் கையை நம்பி வாழ்வதை விட உன் கையை நம்பி வாழ்ந்து பார்…
வாழ்க்கையின் தன்னம்பிக்கையுடன் இருந்ததால் தடைகளைத் தகர்த்து முன்னேறி விடலாம்…
வாழ்க்கையில் பல தோல்விகள் அடையும்போது அனுபவங்கள் கிடைக்கும்…
வெற்றிகள் எளிதாகக் கிடைப்பது அல்ல…
வாழ்க்கையில் போராடினால் தான் வெற்றி கிடைக்கும் முடியும் வரை போராடு…
🌟வாழ்க்கையில்
நீ எண்ண கூடிய எண்ணத்தை உயர்ந்த லட்சியமாக நினை அதுவே உன்னை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும்…
நீ கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு அனுபவமும் வெற்றியடைவதற்கு கற்றுக்கொடுத்த பாடம்…
🌟வாழ்க்கையில் வாழும் நிமிடம் கூட நிரந்தரம் இல்லாத போது நாம் வாழக்கூடிய வாழ்க்கை நிரந்தரமானது அல்ல…
🌟வாழ்க்கையில் என்றும் நிரந்தரமானது மாற்றம் ஒன்றே மாறாதது…
🌟வாழ்வது ஒரு முறை தான் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழலாம்…
🌟பிறரையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கலாம்…
எழுதுவது ; மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்